JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

ஜாக்.org

மௌன விரதம்

06-10-2009
பருவமடைந்த பிறகு அனாதை எனும் நிலை இல்லை. நாள் முழுவதும் மௌன விரதம் என்பதும் இல்லை என்பது நபிமொழி.
அலி(ரலி) : அபூதாவூத்

ஸைனப் என்ற பெண்மணியிடம் அபூபக்கர்(ரலி) வந்தபோது அவர் பேசாமலிப்பதைக் கண்டார்கள். ஏன் இவர் பேசாமலிருக்கிறார்? என்று கேட்ட போது மவுன விரதமிருக்க எண்ணியுள்ளார் என்றனர். அவரைநோக்கி “நீ பேசுவாயாக! மவுனவிரதம் ஹலால் இல்லை. இது அறியாமைக்கால மக்களின் வழக்கமாகும்” என்றனர். உடனே அப்பெண்மணி பேசலானார்
கைஸ் இப்னு : புகாரி

 

“பேரீத்தம் பழத்தின் சிறு பகுதியை தர்மம் செய்வதன் மூலமேனும் நரகிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள! அதுவும் கிடைக்காதவர்கள் (பிறருடன்) நல்லவார்த்தை பேசுவது கொண்டு நரகிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்” என்பது நபி மொழி.
அதீ இப்னு ஹாதிம்(ரலி) : புகாரி, முஸ்லிம்.

 

உங்களில் எவரும் தீயகாரியத்தைக் கண்டால் அதைத் தனது கையால் தடுக்கவும்! அதற்கு இயலாவிட்டால் தனது நாவால் தடுக்கவும்! அதற்கும் இயலாவிட்டால் மனதால் தடுக்கவும். இதுவே ஈமானின் இறுதிநிலையாகும். என்பது நபிம ொழி.
அபூஸயீத்(ரலி) : முஸ்லிம்

 

நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஒரு மனிதர் நின்று கொண்டிருக்கக் கண்டார்கள். அவரைப் பற்றி நபி(ஸல்) விசாரித்தார்கள். “அவர் அபூஇஸ்ராயீல் வெயிலில் நிற்பதாகவும், உட்கார்வதில்லை எனவும், நிழலை அனுபவிப்பதில்லை எனவும், பேசுவதில்லை என்வும் நோன்பு நோற்பதெனவும் இவர் நேர்ச்சை செய்துள்ளார்” என்று மக்கள் கூறினர். அவரைப் பேசுமாறும் நிழலை அனுபவிக்குமாறும், அமருமாறும் அவருக்கு நபி(ஸல்) கட்டளையிட்டு, அவரது நோன்பை முழுமைப்படுத்துமாறு கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி

 

மக்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காக பொய் சொல்பவன் பொய்யனல்லன். என்பது நபிமொழி.
உம்முகுல்ஸும்(ரலி) : புகாரி, முஸ்லிம்

 

அழகிய பேச்சுகள் பேசுவதும் நல்லறமாகும் என்பது நபிமொழி.
அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்.

செய்திகள்