JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

ஜாக்.org

இறை இல்ல ஒழுங்கைப் பேணுங்கள்

07-09-2009

பள்ளியில் (பொருள்) விற்போரையோ, வாங்குவோரையே நீங்கள் கண்டால் (அவரிடம்) உமது வியாபாரத்தில் அல்லாஹ் வெற்றியைத் தராமல் போகட்டும்! எனக் கூறுங்கள், என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார் (திர்மிதி)

பள்ளியில் (எச்சில் துப்புவது தவறாகும். அதற்கு பரிகாரம் அதை மறைப்பதாகும் என்று நபி(ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார் (முஸ்லிம்)

பள்ளியில் (பொருள்) விற்போரையோ, வாங்குவோரையே நீங்கள் கண்டால் (அவரிடம்) உமது வியாபாரத்தில் அல்லாஹ் வெற்றியைத் தராமல் போகட்டும்! எனக் கூறுங்கள், என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார் (திர்மிதி)

பள்ளியில் நீங்கள் இருக்கும் போது பாங்கு கூறப்பட்டால் தொழாமல் பள்ளியில் இருந்து வெளியேற வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)

ஒட்டகம் வழக்கமாக்கிக் கொள்வது போல் பள்ளியில் (தான் தொழுவதற்கு என்று) எந்த ஒரு இடத்தையும் நிரந்தரமாக்கிக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என அப்துர்ரஹ்மான இப்னு ஷிப்லு(ரலி) அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)

அல்லாஹ்வின் பள்ளி வாசலில் (தொழக்கூடாது என) அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை தடை செய்யாதீர்கள் என நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், இப்னுகுஸைமா)

செய்திகள்